‘கூலி’ படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடிய ‘மோனிகா’ பாடல், யூடியூப் தளத்தில் நூறு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துவிட்டது.
இதன் பிறகு, தமிழில் நிலைமை எப்படியோ தெரியாது. ஆனால், இந்திப் பட இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இடைவிடாமல் பூஜாவைத் தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள்.
வேறென்ன, இந்தியிலும் ஒற்றைப் பாடலுக்கு நடனமாட இயலுமா என்று கேட்பதுடன், எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளமாகக் கேளுங்கள், கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்றும் கூறுகிறார்களாம்.
ஆனால் பூஜாவோ, தேடி வந்த அனைத்து வாய்ப்புகளையும் ஒரேயடியாக நிராகரித்துவிட்டதாகத் தகவல்.
“ரஜினி நடிக்கும் படம் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே ஒற்றைப் பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டேன். இனி அவ்வாறு நடனமாட வாய்ப்பில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்துள்ளேன்,” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.

