‘உள்ளம் கேட்குமே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா.
‘அட்டகாசம்’, ‘ஜே.ஜே.’, ‘நான் கடவுள்’, ‘ஓரம்போ’ எனப் பல படங்களில் நடித்த பூஜா, தமிழ் தாண்டித் தெலுங்கு, மலையாளப் படங்களிலும் கலக்கினார்.
இலங்கையைச் சேர்ந்தவரான பூஜா, 2016ஆம் ஆண்டுத் தொழில் அதிபர் பிரசான் டேவிட் என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகிய பூஜா, கணவரின் தொழிலையும் சேர்த்துக் கவனித்துக்கொண்டு வந்தார். அவ்வப்போது இலங்கை படங்களில் தலைகாட்டி வந்தார்.
இதற்கிடையில் பூஜா தமிழ் சினிமாவுக்கு வருகிறார் என்று கூறப்படுகிறது.
இரண்டு இயக்குநர்கள் அவரிடம் கதை சொல்லியிருக்கிறார்களாம். கதையும் நடிகைக்குப் பிடித்துப்போனதால் விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூஜா மீண்டும் சினிமாவுக்குத் திரும்ப இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. 44 வயதிலும் அவரது அழகு குறையவில்லை எனப் பாராட்டு தெரிவித்தும் வருகிறார்கள்.

