சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
வியாழக்கிழமை (நவம்பர் 6) வெளியான ‘அடி அலையே’ எனும் அப்பாடல் வரிகளை ஏகாதசி எழுதியுள்ளார். ஷான் ரோல்டன், தீ இருவரும் பாடியுள்ள இப்பாடல் இணையத்தில் பரவி வருகிறது.
சிவகார்த்திகேயனின் 25வது படமான ‘பராசக்தி’யில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’யின் படப்பிடிப்பு முடிந்து, அதற்குப் பிந்தைய பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜனவரியில் பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளது.

