நடிகை கிரித்தி ஷெட்டி திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தை. வாய்ப்பும் நேரமும் அமைந்தால் உடனடியாக திருப்பதி மலையேறிவிடுகிறார்.
“கடவுளிடம் என் மனத்தில் உள்ள அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிடுவேன். அப்போதுதான் என் மனச்சுமை குறைந்ததுபோல் இருக்கும்,” என்கிறார் கிரித்தி.
வரும் டிசம்பர் மாதம் இவர் கார்த்தியுடன் நடித்துள்ள ‘வா வாத்தியாரே’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘எல்ஐகே’, ரவி மோகனுடன் ‘ஜீனி’ என்று மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இதற்கு திருப்பதி கோவிலுக்குச் சென்று மேற்கொள்ளும் வழிபாடுதான் காரணம் என நம்புகிறாராம்.
“ஒரே மாதத்தில் மூன்று படங்கள் என்பது என்னைப் பொறுத்தவரை பெரிய விஷயம். பெரிய நாயகன், நாயகிகளுக்குத்தான் இப்படியெல்லாம் நடக்கும். சாதாரண நடிகையான எனக்கும் இவ்வாறு நடக்கிறது என்றால் அது ஏழுமலையான் கருணையால் விளைந்த நன்மை.
“என் வாழ்க்கையில் அவரின்றி எதுவும் நடக்காது,” என்கிறார் கிரித்தி ஷெட்டி.

