கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
‘உப்புக் கருவாடு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் இவர். அதன் பின்னர் தெலுங்கு, கன்னடத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.
“அண்மையில் ரச்சிதா நடிப்பில் ‘ஃபயர்’, ‘எக்ஸ்ட்ரீம்’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டிலுமே அவரது நடிப்பு சிறப்பாக இருப்பதாகப் பலரால் பாராட்டப்பட்டது. அதேசமயம் அதிக கவர்ச்சி காட்டி நடிப்பதாகவும் விமர்சிக்கப்பட்டார்.
இதையடுத்து, இனி கவர்ச்சியாக நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளாராம். இத்தகைய கதைகளைத் தவிர்க்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
தற்போது நடிகர் விக்ராந்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரச்சிதா.