‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக ‘கயல்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவரது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட இப்படத்தின் புதிய சுவரொட்டி மூலம் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இந்த ஏற்பாடு குறித்து பூஜாவுக்கு முன்கூட்டியே எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லையாம். திடீரென தனது சமூக ஊடகப் பக்கங்களில் ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவுகளைச் செய்த பிறகே விவரம் தெரியவந்துள்ளது.
“இது நான் எதிர்பாராத பிறந்தநாள் பரிசு. இதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்கள்தான் வாழ்க்கையை இனிமையானதாக மாற்றுகிறது. ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கும் விஜய்க்கும் எனது நன்றிகள்,” என்று கூறியுள்ளார் பூஜா.
கடைசியாகத் தமிழில் ‘ரெட்ரோ’ படத்தில் இவர் நாயகியாக நடித்திருந்தார். அதையடுத்து, ‘கூலி’ படத்தில் ‘மோனிகா’ பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் மனதைக் கொள்ளைகொண்டார்.
தற்போது ராகவா லாரன்சின் ‘காஞ்சனா-4’ படத்தில் நாயகியாக நடிக்கிறார்.