தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான் நடிகையாவதை அம்மா விரும்பவில்லை: ஜான்வி கபூர்

1 mins read
c9e6fe29-1e88-434a-8fd8-c24b6fcf93da
ஸ்ரீதேவியுடன், ஜான்வி கபூர். - படம்: ஊடகம்
multi-img1 of 2

தன் தாய் ஸ்ரீதேவியைப் பின்பற்றி தானும் ‘பிளாஸ்டிக்’ அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக நடிகை ஜான்வி கபூர் கூறியுள்ளார். ஸ்ரீதேவியின் வழிகாட்டுதலில்தான் சிகிச்சை பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, ஒருவர் தன் வாழ்க்கையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் வரக்கூடிய தகவல்களால் தாம் ஈர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டார் ஜான்வி.

“ஆனால் இந்த ஆலோசனையை இளம்பெண்கள் ஏற்க வேண்டும் என்று விரும்பவில்லை. ‘உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எதையும் செய்’ என்பதில் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

“அனைத்து விஷயத்திலும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். நான் மிகவும் புத்திசாலி. நல்ல பழமைவாதி. மேலும் நான் செய்வது சரியானது என்று நினைப்பவள்.

“அம்மாதான் எனக்கு வழிகாட்டினார். அவர் ஒருபோதும் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பியதில்லை. என் மீதான பாதுகாப்பைப் பற்றி மட்டுமே சிந்தித்தார்.

“சரியாகச் சொன்னால், நான் நடிகையாகக் கூடாது என்பதில்தான் அம்மா கண்டிப்பாக இருந்தார். மக்கள் என்னை உடலில் முடி, இரட்டை சடை, மீசையுடன் பார்த்தாலும் பரவாயில்லை என்பது போல் இருந்தார்.

“என்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்பட்டது கவலை ஏற்படுத்தியதால்தான் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்,” என்று கூறியுள்ளார் ஜான்வி கபூர்.

குறிப்புச் சொற்கள்