திரைப்படத்தில் நடிக்க மறுத்த இசையமைப்பாளர் தேவா

1 mins read
7972781a-d694-4ba2-9b8c-d02e251cefc9
இசையமைப்பாளர் தேவா. - படம்: ஊடகம்

‘மீசைய முறுக்கு’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கக் கேட்டு தன்னை அணுகியபோது, நடிக்க இயலாது என்று கூறிவிட்டார் இசையமைப்பாளர் தேவா.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது இசைக் கச்சேரிகளுக்காக உலகின் பல நாடுகளுக்குச் சென்று வருவதாகக் குறிப்பிட்டார்.

“எனவே என்னால் அந்தப் படக்குழுவினருக்கு தகுந்த ஒத்துழைப்பை வழங்க இயலாது. அந்தப் படத்தின் கதை மிக அற்புதமானது. ஆனால் இலங்கை, ஜப்பான், பிரான்ஸ் எனப் பல இடங்களுக்குச் சென்று வருகிறேன். ஆகையால், குறித்த நேரத்துக்குப் படப்பிடிப்புக்குச் செல்வதும் சாத்தியமில்லை.

“அனைத்தையும்விட முக்கியமான காரணம். எனக்கு நடிக்கத் தெரியாது. மேலும், வசனங்களை மனப்பாடம் செய்தாலும்கூட மறந்துவிடுவேன்,” என்றார் தேவா.

கதைப்படி ஒரு ‘தாதா’ கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் இவரிடம் கேட்டுள்ளனர். தம்மால் ஏன் நடிக்க இயலாது என்பதற்கான காரணத்தையும் மறைக்காமல் கூறிவிட்டாராம் தேவா.

குறிப்புச் சொற்கள்