தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளிப் பந்தயத்தில் போட்டியிடும் படங்கள்

2 mins read
348ac4ff-a441-4bf8-9597-4e4df8660a7b
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூடு’ படச் சுவரொட்டி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

இந்த ஆண்டின் தீபாவளிக்கு திரைக்கு வர ஏகப்பட்ட படங்கள் போட்டிபோடத் தயாராகி வருகின்றன. அவற்றுள் லெஜண்ட் சரவணன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் அவரது இரண்டாவது படமும் ஒன்று.

பிரதீப் ரங்கநாதனின் ‘டியூடு’

‘லவ் டுடே’, ‘டிராகன்’ என்ற இரண்டு பிரம்மாண்டான வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்து நாயகனாக நடித்து வரும் ‘டியூடு’ படத்தைக் கீர்த்தீஸ்வரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரதீப்பின் ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியீடாக உள்ளது.

லெஜண்ட் சரவணனின் பெயரிடப்படாத படம்

தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்களுள் ஒருவரான லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்த ‘தி லெஜண்ட்’ படம் 2022ல் வெளியீடானது.

இதையடுத்து, இயக்குநர் துரை செந்தில்குமாருடன் கூட்டணி அமைத்து அவர் தனது பெயரிடப்படாத இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில், அண்மையில் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட லெஜண்ட் சரவணன், தனது புதுப் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரை காண உள்ளதாக அறிவித்தார்.

துருவ் விக்ரமின் ‘பைசன்’

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ள படம் ‘பைசன்’. ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்த மாரி செல்வராஜ்தான் ‘பைசன்’ படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிந்து பின்னணிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படமும் தீபாவளிக்கு வெளியீடாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

களமிறங்கும் சூர்யாவின் ‘கருப்பு’

தீபாவளிப் போட்டியில் களமிறங்க மற்றொரு திரைப்படமும் காத்திருக்கிறது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள ‘கருப்பு’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து உள்ளார். இப்படத்தில் சூர்யாவின் நாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்