‘கோர்ட்’ படத்தின் தமிழ்ப் பதிப்பில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாண்டு மார்ச் மாதம் நடிகர் நானி தயாரிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’.
மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு உரிமையினைக் கைப்பற்றினார் தியாகராஜன்.
இதன் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘கோர்ட்’ படத்தில் வரும் காதலர்கள் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனின் மகன் கிருத்திக், தேவயானியின் மகள் இனியா இருவரும் நடிக்கவுள்ளார்கள்.
பிரியதர்ஷி கதாபாத்திரத்தில் பிரசாந்த், சாய்குமார் கதாபாத்திரத்தில் தியாகராஜன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தினைத் தியாகராஜனும், கதிரேசனும் இணைந்து தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் வெளியான படம் ‘கோர்ட் – எ ஸ்டேட் Vs எ நோபடி’. இதில் ப்ரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நானி தயாரிப்பில் வெளியான இப்படம் விநியோகஸ்தர்கள் அனைவருக்குமே பல மடங்கு லாபம் ஈட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

