‘மீசைய முறுக்கு’ 2ஆம் பாகம் படப்பிடிப்பு தொடங்கியது

1 mins read
c7450934-3b70-4358-8e91-065fce78e0be
‘ஹிப் ஹாப்’ ஆதி. - கோப்புப் படம்: ஊடகம்

2017ஆம் ஆண்டில் ‘ஹிப் ஹாப்’ ஆதி இசையமைத்து, இயக்கி, நடித்து வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘மீசைய முறுக்கு’.

ஆதி வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவத்தை மையப்படுத்தி ‛மீசைய முறுக்கு’ படம் உருவாகியது.

இந்தப் படத்தின் மூலம்தான் ஆதி இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமானார்.

அடுத்து வரும் படங்களில் அவர் நாயகனாகவும், இசையமைப்பாளராகவும், சமயங்களில் இயக்குநராகவும் செயல்பட்டார்.

இந்நிலையில் ‘மீசைய முறுக்கு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது எனத் தகவல் வெளியானது. இதையடுத்து தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தைத் தயாரித்த சுந்தர்.சியின் அவ்னி மூவிஸ் நிறுவனத்துடன் நடிகர் ஆதியும் இணைந்து இந்தப் பாகத்தைத் தயாரிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திஆதிசினிமா

தொடர்புடைய செய்திகள்