‘மயிலா’ திரைப்படம் முழுவதும் கிராமத்துப் பின்னணியில் உருவாகி வருகிறது.
இது தனது சுதந்திரத்துக்காக, சுயமரியாதைக்காகப் போராடும் ‘பூங்கொடி’ என்ற பெண்ணின் கதையை விவரிக்கும் படம்.
“தன் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அன்பையும் வேதனையையும் தாங்கியுள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகம். அத்தகைய பெண்கள், குழந்தைகளின் பேசப்படாத துணிச்சலை இந்தப் படம் திரையில் பிரதிபலிக்கும்,” என்கிறார் படத்தின் இயக்குநர் செம்மலர் அன்னம்.
இவர் ஏற்கெனவே சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். தவிர, ‘அயலான்’, ‘மாவீரன்’ உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
‘மயிலா’ படத்தில் மெலோடி டார்கஸ் நாயகியாகவும் அவரது மகளாக சுடர்கொடியும் நடித்துள்ளனர்.
மேலும், கீதா கைலாசம், சத்யா மருதானி, பிரியங்கா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற பிரிவின்கீழ் திரையிடப்பட ‘மயிலா’ தேர்வாகியுள்ளது.

