மலையாளத்தில் அறிமுகமாகி இப்போது தமிழிலும் கதாநாயகியாகிவிட்ட மமிதாவுக்கு, சென்ற இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு கிடைக்கிறது.
அதனால் தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிப் படங்களில் நடித்து தென்னிந்தியாவின் அழகுச் சின்னங்களில் ஒன்றாக மாறிவிட்டார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் அவர் நடித்துள்ள படங்களின் எண்ணிக்கை 18. தற்போது கைவசம் உள்ள 5 படங்களில் நான்கு தமிழ்ப் படங்கள். அடுத்த ஆண்டு 25 படங்களை முடித்துவிடுவார் என உறுதியாக நம்பலாம்.
இதனிடையே, கேரளாவின் கோட்டயம் பகுதியில் தன் தந்தைக்காக 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைக் கட்டி வருகிறார் மமிதா.
மேலும், அவரது அண்ணனுக்காக ஒரு வணிக வளாகமும் உருவாகி வருகிறது. ஐந்து மாடி கட்டடமாக பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள இந்த வணிக வளாகம் விரைவில் திறப்பு விழா காண உள்ளது.

