‘அந்தகாரம்’ பட இயக்குநர் விக்னராஜனும் ஹரிஷ் கல்யாணும் கூட்டணி அமைக்க உள்ளனர். இருவரும் இணையும் புதுப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இப்படத்தின் நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் ஒப்பந்தமாகி உள்ளார்.
இவர் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘7ஜி ரெயின்போ காலனி 2’ன் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரிஷ் கல்யாண் படம் வெளியாகும் முன்பே, செல்வா படம் வெளியானால், தனது நடிப்பு நிச்சயம் பேசப்படும் என்று எதிர்பார்க்கிறாராம் அனஸ்வரா.
எத்தகைய கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறீர்கள் எனக் கேட்டால், “தமிழில் இப்போதுதான் நடிக்கத் தொடங்கினேன். எனவே, பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. நல்ல கதைகள் அமைந்தால் போதும்,” என்கிறார் அனஸ்வரா.