கவிஞர் வைரமுத்துவின் மூத்த மகனும் தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவருமான மதன் கார்க்கி தனது ஆயிரமாவது பாடலை எழுதியுள்ளார்.
இந்தப் பாடல் ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’ படத்தில் இடம்பெற்றுள்ளது. சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘இரும்பிலே ஒரு இதயம்’ என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் மதன் கார்க்கி.
எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா என மேலும் பல பணிகளைச் செய்து வருகிறார். தந்தை வைரமுத்து 6,000 பாடல்களை எழுதியுள்ள நிலையில், மதன் கார்க்கிக்கு பலரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
மதனின் மனைவி நந்தினியும் ஆங்கில கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பல படங்களுக்கு ஆங்கில ‘சப்டைட்டில்’ எழுதிக் கொடுக்கிறார்.