இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகன் ஆகிவிட்டார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இவர் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், லோகேஷ் ஜோடியாக மிர்னா மேனன் ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர்தான் இந்த மிர்னா. தற்போது ‘ஜெயிலர்-2’ படத்திலும் நடித்து வருகிறார். மலையாள ரசிகர்களுக்கு மிர்னா மேனன் நன்கு அறிமுகமானவர்.
இப்படத்தில் லோகேஷுக்கு இரண்டு நாயகிகளாம். இன்னொரு நாயகியாக சுதா என்பவர் அறிமுகமாகிறார்.