தமிழ் படத்திற்கு இசையமைக்கும் ‘கேஜிஎஃப்’ இசையமைப்பாளர்

1 mins read
c55f2d6e-7cc8-4276-920b-b85977f43318
இசையமைப்பாளர் ரவி பசூர். - படம்: ஊடகம்

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் நாயகனாக வலம்வருபவர் அர்ஜூன். இவர் தற்போது அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோருடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.

சுபாஷ் கே ராஜ், பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். அப்படத்தை ‘ஏஜிஎஸ்’ நிறுவனம் இயக்குகிறது.

ப்பா - மகளுக்கு இடையே நடக்கும் கதையை மையமாகக் கொண்டு அப்படம் உருவாகி வருவதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், அப்படத்தின் மூலம் ‘கேஜிஎஃப்’ படத்திற்கு இசையமைத்த ரவி பசூர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

குறிப்புச் சொற்கள்