அனுஷ்கா ஷெட்டி நாயகியாக நடித்த ‘காட்டி’ என்ற படம் செப்டம்பரில் வெளியீடு கண்டது. அதையடுத்து, ரோஜின் தாமசின் இயக்கத்தில் மலையாளத்தில் ‘கதனார் தி வைல்ட் சோர்சரர்’ என்ற படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார்.
இப்படத்தில் அனுஷ்காவுடன் ஜெயசூர்யா, பிரபு தேவா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) அனுஷ்காவின் 44வது பிறந்தநாளையொட்டி அவர் இடம்பெறும் சுவரொட்டி ஒன்றைக் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரில்லர் படத்தில் ‘அமானுஷ்’ எனும் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கிறார்.
இந்தப் படம், ஒன்பதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பாதிரியார் கடமடத்து கதனாரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகிறது. அவர் மந்திரச் சக்திகளைக் கொண்டிருந்தவராகவும் கூறப்படுகிறது.

