தற்போது ‘வா வாத்தியாரே’, ‘சர்தார்-2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.
இரு படங்களின் படப்பிடிப்பு மட்டுமல்லாமல், மற்ற தொழில்நுட்பப் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இதையடுத்து, தமிழில் இவர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன.
இதனிடையே, மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெற்றி பெற்ற ‘தொடரும்’ படத்தின் இயக்குநர் தருண்மூர்த்தியைச் சந்தித்துப் பேசியுள்ளார் கார்த்தி. அவரது இயக்கத்தில் கார்த்தி நடிப்பது உறுதியாகிவிட்டதாம்.
இப்படி அடுத்தடுத்து படங்கள் வெளியான வண்ணம் இருந்தாலும், புது இயக்குநர்கள், அனுபவ இயக்குநர்களிடம் கதை கேட்கும் வழக்கத்தை மட்டும் இவர் விடுவதாக இல்லை.
இந்தக் காரணத்தினாலேயே அண்மைக் காலமாகக் கார்த்தியை தமிழ்த் திரையுலகத்தினர் ‘மிஸ்டர் கூல்’ என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

