நாகார்ஜுனாவுடன் இணையும் கார்த்தி

1 mins read
aae0a93b-ced5-46f6-89cd-538a35a4e398
கார்த்தி. - படம்: ஊடகம்

கார்த்தி நடிக்கும் படங்களுக்கு தெலுங்கிலும் தனி மரியாதை கிடைத்து வருகிறது. அவருக்கு இருக்கும் இந்த வரவேற்பை தமிழ்த் திரையுலகம் பயன்படுத்திக் கொள்கிறதோ இல்லையோ, தெலுங்கு இயக்குநர்களுக்கு கார்த்தியின் அருமை புரிந்திருக்கிறது.

தெலுங்குத் திரையுலகின் மூத்த நாயகன் சிரஞ்சீவி, தற்போது ‘மனசங்கர வரபிரசாத் காரு’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குநர் பாபி இவரை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இதில்தான் கார்த்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இது வில்லன் வேடமாக இருக்கக்கூடும் என்று சில சமூக ஊடகங்களில் தகவல் பரப்ப, கார்த்தியின் ரசிகர்கள், அவர் வில்லனாக நடிக்க வாய்ப்பே இல்லை என பதில் கொடுத்து வருகின்றனர்.

கார்த்தி ஏற்கெனவே தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் இணைந்து ‘ஊபிரி’ படத்தில் நடித்துள்ளார்.

‘ஹிட்-3’ படத்தின் முடிவில் வரும் கார்த்தி, அதன் நான்காம் பாகமான ‘ஹிட்-4’ படத்திலும் நடிக்க உள்ளார்.

குறிப்புச் சொற்கள்