‘கண்ணும் கண்ணும் கலந்து’ வைஜெயந்தி மாலா 92வது பிறந்த நாளைக் கொண்டாடினார்

1 mins read
9435a8cc-fd05-43de-9d89-a4e2b0baec3a
வைஜெயந்தி மாலா. - கோப்புப் படம்: ஊடகம்

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகையான வைஜெயந்தி மாலா புதன்கிழமை (ஆகஸ்ட் 13) தனது 92வது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

அவருக்கு திரையுலகத்தினர், நண்பர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தமிழ், இந்தி திரைப்படங்களில் கொடிகட்டி பறந்த வைஜெயந்திமாலா, சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவர்.

சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு 13 வயதில் பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்தவர். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வாழ்க்கை (1949) படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி தமிழிலும் இந்தியிலும் பல வெற்றிபடங்களைக் கொடுத்தார்.

தமிழில் ‘இரும்புத்திரை’, ‘தேன்நிலவு, பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இன்றைக்கும் வைஜெயந்திமாலா என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ‛வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் பத்மினியுடன் அவர் ஆடிய ‛கண்ணும் கண்ணும் கலந்து’ என்ற போட்டி நடனம்தான்.

இந்தியில் முன்னணி கதாநாயகர்களுடன் அவர் ஜோடியாக நடித்துள்ளார்.

பின்னர் அரசியலுக்குள்ளும் நுழைந்தார்.

1984ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் தென்சென்னை தொகுதியின் எம்பியானார் அவர்.

ஏறக்குறைய 63 படங்களில் கதாநாயகியாக அவர் நடித்துள்ளார். பரதநாட்டியத்திலும் புகழ் பெற்று விளங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடனம் ஆடிய காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.

ஐ.நா.சபையில் நடனம் ஆடிய பெருமையையும் பெற்றவர்.

இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதான பத்மபூஷன் விருதுபெற்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்