கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்த படம் ‘ஹே ராம்’. அப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
கமலை மிகவும் பிடிக்கும் என்பதாலும் சிறுவயது முதலே திரையுலகைத் தமது நடிப்பால் ஈர்த்த கமலுடன் ஒரு முறையாவது நடிக்க வேண்டும் என்ற ஆவலாலும் அப்படத்தில் நடிக்க ஷாருக்கான் ஒப்புக்கொண்டார்.
திட்டமிட்டதைவிட அப்படத்தைத் தயாரிக்க அதிக செலவானதால், சம்பளம் கொடுக்கப் பணம் இல்லை எனக் கமல் ஷாருக்கிடம் கூறினார்.
‘சம்பளம் எனக்கு வேண்டாம். உங்களுடன் நடித்ததே போதும்’, என ஷாருக் கூறியதாகவும் அவருக்குத் தன் கைக்கடிகாரத்தைப் பரிசாகக் கொடுத்ததாகவும் கமல் நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
“ஒரு கைக்கடிகாரத்திற்காக யார் படத்தில் நடிப்பார் என ஷாருக்கைப் பற்றி பெருமையாகப் பேசினார் கமல்.
இத்தகவலைக் கமல் ரசிகர்கள் ஷாருக்கான் பிறந்தநாளையொட்டி சமூக ஊடகத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
‘ஹே ராம்’ படத்தின் இந்திப் பதிப்புக்கான உரிமை ஷாருக்கிடம் தான் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

