கார்த்தியுடன் இணையும் கல்யாணி

1 mins read
11f89b2d-1865-4a64-8ce9-0a6f47606099
கல்யாணி பிரியதர்ஷன். - படம்: ஊடகம்

‘சர்தார் 2’, ‘வா வாத்தியார்’ ஆகிய இரு படங்களிலும் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இப்போது அவரது முழுக் கவனமும் ‘மார்ஷல்’ படத்தில்தான் குவிந்துள்ளது.

‘டாணாக்காரன்’ படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் உருவாகும் படம் இது.

கடந்த 1960களில் ராமேசுவரம் பின்னணியில் நடந்த சம்பவங்களைக் கொண்டு, கடல் கொள்ளையர்கள் கதைக்களத்தில் உருவாகிறதாம். பூசை போட்ட கையோடு படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டனர்.

இதற்காக, சென்னையில் பிரம்மாண்ட கப்பல் போன்ற அரங்கு ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்துள்ளனர்.

முதன்முறையாக கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஒரே சமயத்தில் பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இந்தப் படம் முடிந்த பிறகே ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்தி நடிப்பாராம்.

குறிப்புச் சொற்கள்