தாய்ப்பால் தானத்தின் மூலம் மேலும் உயர்ந்த ஜுவாலா கட்டா

1 mins read
db2b21cf-a509-4066-88cc-930749415c7f
ஜுவாலா கட்டா. - படம்: ஊடகம்

30 லிட்டர் தாய்ப்பாலை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கி பாராட்டுகளை அள்ளிக்குவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியும் பிரபல பேட்மிட்டன் வீராங்கனையுமான ஜுவாலா கட்டா.

இருவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த ஜுவாலா, மகளுக்கு ‘மிரா’ எனப் பெயர் வைத்து பாசத்துடன் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், முப்பது லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ள ஜுவாலா, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

“தாய்ப்பால் உயிர்களைக் காப்பாற்றுகிறது. குறைப் பிரசவம், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்குத் தானமாக கொடுக்கும் தாய்ப்பால் அவர்களின் வாழ்க்கையை மாற்றும்.

“நீங்கள் தானம் செய்ய முடிந்தால், அது தேவைப்படும் குடும்பத்திற்கு நீங்கள் ஒரு ‘ஹீரோ’வாக மாறலாம். இதுகுறித்து அதிகம் தெரிந்து கொள்ளுங்கள். அதை உலகுக்குப் பகிருங்கள். பால் வங்கிகளுக்கு ஆதரவளியுங்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவிலான பேட்மின்டன் போட்டிகளில் இந்தியாவுக்காகப் பங்கேற்று அப்போட்டிகளில் வென்று சாதித்தவர் ஜுவாலா கட்டா. தற்போது ஒரு தாயாகவும் அவர் உயரம் தொட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்