ஜீப் கவிழ்ந்தது: ஜோஜு ஜார்ஜ் காயம்

1 mins read
f48f6897-90ca-4606-87e2-72596aabe206
நடிகர் ஜோஜு ஜார்ஜுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், தமிழில் ‘ஜகமே தந்திரம்’, ‘பஃபூன்’, ‘தக் லைஃப்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் நடித்து வரும் படம் ‘வரவு’.

ஷாஜி கைலாஷ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மூணாறு அருகே நடந்து வந்தது. ‘ஜீப்’ ஓட்டிச் செல்வது போன்ற காட்சியை செப்டம்பர் 20ஆம் தேதி படமாக்கியபோது எதிர்பாராத அசம்பாவிதம் நிகழ்ந்தது.

ஜீப் திடீரென கவிழ்ந்ததால் படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஜீப் கவிழ்ந்தபோது அதில் இருந்த நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ், தீபக் பரம்போல், சண்டைக் கலைஞர் ஆகியோருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்