தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை சென்று கதை கேட்கும் ஜான்வி

1 mins read
a9a5a60c-8611-4a8d-a214-58c84b727099
ஜான்வி கபூர். - படம்: ஊடகம்

ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாகிறார் என்று பலமுறை செய்தி வெளியாகி, அதை ரசிகர்கள் படித்து சலிப்படைந்துவிட்டனர்.

ஆனால், மிக விரைவில் அவ்வாறு நடக்கப்போவதாக மீண்டும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஜான்வி கபூர் மும்பை நடிப்புப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றவர். அப்போது அங்கு அறிமுகமான இரு தோழிகள் தற்போது திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்களாம்.

அவர்கள் மூலமாக தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த சில பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களின் தொடர்பு ஜான்விக்கு கிடைத்துள்ளதாகவும் அந்நிறுவனங்களின் பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்து தங்கள் தயாரிப்பில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்.

இதற்காக கடந்த சில மாதங்களாகவே மும்பையில் இருந்து அடிக்கடி சென்னைக்குப் பறந்து சென்று தன் சித்தி வீட்டில் தங்கிச் செல்கிறாராம் ஜான்வி.

கடைசியாக அவரை பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைகூடவில்லை.

குறிப்புச் சொற்கள்