இதுதான் தனது கடைசி திரைப்படம் என ‘ஜனநாயகன்’ படம் குறித்து வெளிப்படையாக அறிவித்திருந்தார் விஜய்.
அதன் பின்னர், ‘முழுநேர அரசியல்’ எனக் கூறி, தவெகவின் அரசியல் பயணம் பற்றியும் கூறியிருந்தார்.
இரு வாரங்களுக்கு முன், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கும் கல்வி விழாவை நடத்தினார் விஜய்.
இந்த விழாவில் பேசிய மாணவி ஒருவர், “அண்ணா, நீங்க அரசியலுடன் ஆண்டுக்கு ஒரு திரைப்படத்திலாவது நடிக்க வேண்டும்,” எனக் கேட்க, ‘முயற்சி செய்கிறேன்’ என விஜய் கூறியிருந்தார்.
இது ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியையும் தந்திருக்கிறது.
இதற்கிடையே, ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பின்போது, அதில் நடித்து வரும் நடிகை மமிதா பைஜுவிடம் விஜய் சொன்ன விஷயம் பரபரப்பை அதிகமாக்கிவிட்டது.
“படப்பிடிப்பு நடந்தபோது விஜய்யிடம் ‘இந்த ‘ஜனநாயகன்’ படம்தான் உங்களது கடைசி படம் எனச் சொல்கிறார்களே,” எனக் கேட்டேன்.
“அதற்கு விஜய், ‘இதுதான் கடைசிப் படமா என்பது எனக்குத் தெரியவில்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகுதான் எந்த முடிவையும் எடுப்பேன்’ எனப் பதிலளித்தார்.”
தொடர்புடைய செய்திகள்
இப்படி மமிதா வெளியிட்டிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தொண்டர்களிடம் சொல்ல வேண்டிய விஷயத்தை சக நடிகையிடம் சொல்லியிருக்கிறீர்களே’ என விஜய்யை ஒரு தரப்பினர் விமர்சிக்கிறார்கள்.
தேர்தலில் வெற்றி எனில் முழுநேர அரசியல், தோல்வி கண்டால் முழு நேர நடிகர். ஓரளவு வெற்றி பெற்றால், சினிமா, அரசியல் என இரட்டைச் சவாரி. இதுதான் விஜய்யின் திட்டம் என்று இன்னொரு தரப்பு கூறிக்கொண்டிருக்கிறது.