இது ஓர் இனிய, மாயாஜாலப் பயணம்: ஜோஜு ஜார்ஜ்

1 mins read
cc18de0d-50ba-45cd-9847-a89ae7265cc7
ஜோஜு ஜார்ஜ். - படம்: ஊடகம்

‘ஜகமே தந்திரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் தற்போது ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் விளம்பர நிகழ்வுகளின்போது, ஜோஜுவின் நடிப்பு குறித்து கமல்ஹாசன் பாராட்டத் தவறியதே இல்லை.

நல்ல நடிகர் என்று பெயரெடுத்த ஜோஜு ஜார்ஜுக்கு நடிக்கவே தெரியவில்லை என்று கூறி, நடிகர் பிரித்விராஜின் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சிறு சிறு கதாபாத்திரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஜோஜு. அந்த வகையில், ஒருமுறை பிரித்விராஜ் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

“அந்த ஒரு குறிப்பிட்ட காட்சிக்குத் தேவைப்பட்ட உணர்ச்சியை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. ஒருசில முறை காட்சியைப் படமாக்கினர்.

“சரியாக நடிக்கவில்லை என்றதும் எனக்குப் பதில் வேறொருவரை நடிக்க வைத்தனர். அப்போது என்னால் கோபப்படவும் முடியவில்லை. ஆனால் எனது நடிப்பை மேம்படுத்த முடிவு செய்தேன்.

“எனது முதல் வெற்றிப்படமான ‘ஜோசஃப்’ முதல் தற்போது வெளியாகி உள்ள ‘தக் லைஃப்’ வரையிலான எனது திரைப்பயணம் ஒரு மாயாஜாலம்தான்,” என்கிறார் ஜோஜு ஜார்ஜ்.

மலையாளத்தில் படம் இயக்கிய இவருக்கு, தமிழிலும் படம் இயக்கும் ஆசை உள்ளதாம். மிக விரைவில் அதற்கான முயற்சிகள் தொடங்கும் எனத் தெரிகிறது. எனினும், அப்படத்தில் நடிக்க ஜோஜு ஜார்ஜ் விரும்பவில்லையாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்