நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை இலியானா.
நடிகர் விஜய்யின் ஜோடியாக ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ படத்தில் நடித்திருந்த இவர், திருமணத்துக்கு முன்பே முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
தற்போது மீண்டும் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ள செய்தியை இணையத்தில் அவர் பதிவிட்டுள்ளார். குழந்தைக்கு கியானு ரபே டோலன் என பெயர் வைத்துள்ளோம் என்றும் கடந்த 19ஆம் தேதி குழந்தை பிறந்தது என்றும் குழந்தையின் புகைப்படத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இவர் கடந்த 2018ல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரை தான் நேசிப்பதாகவும் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இலியானாவிற்கு 2023, ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்னரே தனது கணவரின் பெயர் மைக்கெல் டோலன் என்றும் மகனின் பெயர் கோவ் போனிக்ஸ் டோலன் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ‘டூ அவர் டூ பியார்’ என்ற படத்தில் நடித்திருந்தார் இலியானா.