தான் அமைத்துள்ள அடுத்த சிம்பொனித் தொகுப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இளையராஜா.
இதுகுறித்து தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைவருக்கும் தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“அடுத்த சிம்பொனி இசைக்கான பணிகளை விரைவில் தொடங்க உள்ளேன். ‘சிம்பொனிக் டான்சஸ்’ என்ற புதிய இசைக்கோர்வையையும் எழுத உள்ளேன்,” என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் இளையராஜா.
கடந்த மார்ச் மாதம் லண்டனில் தமது முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றி இருந்தார். இதையடுத்து, அண்மையில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.