தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹாலிவுட்டில் நடிக்க அழைப்பு வந்தால் போவேன்: அஜித்

2 mins read
ae35fcd3-8c60-45ef-a985-08b8b3e90cd0
நடிகர் அஜித்குமார். - படம்: ஊடகம்

‘பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’, ‘எஃப் 1’ போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் போவேன் என்று நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் உள்ள அஜித், கார்ப் பந்தயப் போட்டியிலும் பங்கேற்று அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார்ப் பந்தயப் போட்டிகளில் அஜித் பங்கேற்று வருகிறார்.

பெல்ஜியத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ‘கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3’ சாம்பியன்ஷிப் போட்டியின் ‘புரோ ஏ.எம்’ பிரிவில் அஜித்குமாரின் அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியிருந்தது.

ஏற்கெனவே, துபாயில் நடந்த கார்ப் பந்தயத்தில் அஜித்தின் அணி 3வது இடத்தைப் பிடித்து சாதித்தது. இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடந்த போட்டிகளிலும் பரிசுகளை வென்று இருந்தது.

தொடர்ந்து கார்ப் பந்தயத்தில் அஜித் மற்றும் அவரது அணி கலக்கிவரும் நிலையில், ‘பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’, ‘எஃப் 1’ போன்ற கார்ப் பந்தயப் போட்டி தொடர்பான புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் போவேன் என்று நடிகர் அஜித்குமார் கூறியிருக்கிறார்.

தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் கார்ப் பந்தயப் போட்டியில் பங்கேற்றுள்ள அஜித்திடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அஜித், ‘பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’, ‘எஃப் 1’ போன்ற படங்களில் அழைப்பு வந்தால் நடிப்பேன். எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்