அதர்வா, நிமிஷா சஜயன் இணைந்து நடித்துள்ள ‘டிஎன்ஏ’ திரைப்படத்துக்கு விமர்சன ரீதியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
படம் பார்த்த அனைவரும் மிகவும் நன்றாக உள்ளது எனப் பாராட்டுகிறார்களாம்.
“இந்த வெற்றியை, புதிதாகத் திருமணம் ஆனவர்களுக்கும் குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கும் அர்ப்பணிக்கிறோம். காரணம், இப்படத்தின் கதை அப்படிப்பட்டது,” என்கிறார் அதர்வா.
இவரைவிட நாயகி நிமிஷா சஜயன் இருமடங்கு உற்சாகத்தில் உள்ளார்.
“இதில் பாசமான அம்மாவாக நான் நடித்துள்ள காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உணர்வுபூர்வமான கதையும் மற்ற காட்சிகளும் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்துள்ளது. படம் பார்த்தவர்கள் எனக்கு விருது கிடைக்கும் என்கிறார்கள். எனக்கு விருதும் வேண்டும், தமிழில் அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகளும் வேண்டும்,” என்கிறார் நிமிஷா சஜயன்.