கோவைத் தமிழ் தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார் நடிகை கிரித்தி ஷெட்டி.
இவர் தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக, ‘லவ் இன்ஷுரன்ஸ் கம்பெடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், கார்த்தியுடன் ‘வா வாத்தியாரே’, ‘ஜீனி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கோவை மக்களின் கலாசாரமும் பாரம்பரியமும் வெகுவாகக் கவர்ந்தவை என்றார்.
“கோவையில் பேசப்படும் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு கிடைத்த அன்பும் வரவேற்பும் என்னை நெகிழ வைத்துவிட்டது. இந்த அன்புக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
“எனக்கும் மற்ற நடிகைகளைப் போல் அதிகமான தமிழ்ப் படங்களில் நடிக்கும் ஆசை உள்ளது. கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வருகிறேன். அந்தப் படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்,” என்கிறார் கிரித்தி ஷெட்டி.