‘கூலி’ படத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்தேன் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.
`வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.
`லியோ’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஷ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கன்னட செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்திருக்கும் பேட்டியில், “கூலி திரைப்படம் உருவான கடந்த இரண்டு ஆண்டுகளாக, நான் திரைப்பட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.
“என் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ, சமூக ஊடகங்களுடனோ எதற்கும் நேரம் ஒதுக்கவில்லை. எனது 36 - 37 ஆண்டு வாழ்க்கையில், ‘கூலி’ படத்திற்காகப் பெரும் உழைப்பைக் கொடுத்து இருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.