பிந்து மாதவிக்கு முன்பு போல் அதிகமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
கடந்த ஆண்டு அவர் நடித்த ‘மாயன்’ படம் வெளியானது. அதற்கு முன்பு ‘கழுகு-2’ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ஜிவி பிரகாஷும் பிந்துமாதவியும் நடித்துள்ள ‘பிளாக் மெயில்’ படம் திரைகாண உள்ளது.
இதில், தேஜு அஸ்வினிதான் கதாநாயகி என்றாலும், பிந்துவுக்கு முக்கியமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாம்.
இந்நிலையில், அண்மைய பேட்டியில் மனம் திறந்து பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார் பிந்து மாதவி.
“பெண்கள் தங்களுக்குரிய தனிப்பட்ட இடத்தைப் பெறுவதற்காக தொடர்ந்து சவால்களை எதிர்கொள்கிறார்கள்.
“ஆனால், இயக்குநர் மு.மாறன் ‘பிளாக் மெயில்’ படக் கதையை விவரித்தபோது, அது என்னுடன் உடனடியாக ஓர் இணைப்பை ஏற்படுத்தியது. இது எனக்காகவே காத்திருந்த கதாபாத்திரம் போல் உணர்ந்தேன்.
“உணர்வும் ஆழமும் கலந்து அவர் உருவாக்கிய என் கதாபாத்திரம் எனக்குப் பெரிய பொறுப்பையும் தந்தது. முக்கியமான பல கதாபாத்திரங்களுடன் இணைந்து எனது காட்சிகள் வந்திருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
“ஜிவி பிரகாஷ் போன்ற அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகருடன் பணியாற்றிய அனுபவம் அருமை. தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்,” என்று உற்சாகத்துடன் பேட்டியளித்துள்ளார் பிந்து மாதவி.
தமிழில் அறிமுகமான வேகத்தில், அடுத்தடுத்து பல படங்களில் நடித்துப் பெயர் வாங்கிய இவருக்கு, பிறகு நல்ல பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.
கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழிலும் பிற மொழிகளிலும் தேடி வரும் வாய்ப்புகளை மட்டுமே ஏற்று நடித்து வருகிறார் பிந்து மாதவி.
தற்போது ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிந்து மாதவி.

