தம்மிடம் யாராவது எந்தக் காரணத்துக்காகவும் பொய் சொன்னால் அதை ஏற்கவே இயலாது என்கிறார் தமன்னா (படம்).
அப்படிப்பட்டவர்கள் தனது தோழியாகவோ, தனக்கு நெருக்கமான வட்டத்திலோ நீடிக்க இயலாது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஒருசிலர் என்னிடம் பொய் சொன்னால்கூட, அதை முழுமையாக நான் நம்பிவிடுவேன் என நினைக்கிறார்கள். அவர்கள் சொல்லும் பொய்யைவிட, என்னை இப்படி எடைபோட்டுள்ளதை நினைத்தால் கோபமாக வரும்,” என்று தமன்னா கூறியுள்ளார்.

