பொக்கிஷமாகப் பாதுகாக்கிறேன்: ஸ்ரீநிதா

1 mins read
c11d0693-24a3-46df-aafd-3f4799c2f481
ஸ்ரீநிதா. - படம்: ஊடகம்

விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர்’ போட்டி நிகழ்ச்சியில் முதலிடம் பெற்றவர் ஸ்ரீநிதா (படம்). 15 வயதுதான் ஆகிறது. அதற்குள் 70க்கும் மேற்பட்ட பெரிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி கண்டுள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீநிதா, தற்போது மணிப்பூரைச் சேர்ந்த ரே அச்சான் என்பவரிடம் மேற்கத்திய இசையைக் கற்று வருகிறாராம். மேலும், முறைப்படி கர்நாடக - இந்துஸ்தானி இசையும் கற்று திரையிசைப் பாடகியாக உருவாக வேண்டும் என்பதுதான் தனது லட்சியம் என்கிறார்.

“கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்குப் பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போது அவர் முன்பு ‘சத்தியம் சிவம் சுந்தரம்’ என்ற இந்திப் பாடலைப் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

“நான் பதற்றத்துடன் ஏறக்குறைய நான்கரை நிமிடங்களுக்குப் பாடலைப் பாடினேன். பிரதமர் தன் கையால் தாளம் போட்டவாறே வெகுவாக ரசித்தார்.

“பாடி முடித்ததும் மேடையில் என்னை அழைத்து, ‘அழகாகப் பாடுகிறீர்கள், இன்னும் வளர வேண்டும்’ எனப் பாராட்டி ஆசி வழங்கினார்.

“பிறகு அவர் பரிசளித்த சால்வையை, விலை மதிக்கமுடியாத அந்தப் பரிசைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன்,” எனச் சொல்லும் ஸ்ரீநிதாவுக்குப் பின்னணிப் பாடகி ஷ்ரேயா கோஷலைப் போல் உருவாக வேண்டும் என்பதே லட்சியமாக உள்ளதாம்.

குறிப்புச் சொற்கள்