யார் கண் பட்டதோ தெரியவில்லை, அண்மைக் காலமாக தன்னைப் பற்றி ஒரு தரப்பினர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக புலம்பிக் கொண்டிருந்தார் கயாது லோஹர். இதனால் பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை அறவே தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, தமிழ் ரசிகர்களின் ஆதரவு தமக்கு பெரும் ஊக்கம் அளிப்பதாகக் குறிப்பிட்ட கயாது, தற்போது ஐந்து படங்களில் நடித்து வருவதாகத் தெரிவித்தார்.
“நான் அசாமைச் சேர்ந்தவள். ஆனால் என் தாய்மொழி நேப்பாளம். இதைச் சொல்லும்போதே என்னைப் பலரும் வியப்பாகப் பார்க்கிறார்கள்.
“தற்போது ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறேன்,” என்றார் கயாது.
மேலும், ஜிவி பிரகாஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். தவிர, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திலும் இவர்தான் நாயகியாம்.
எனினும், சிம்பு ஜோடியாக இவர் நடிக்கவிருந்த படம் திடீரெனக் கைவிடப்பட்டதால் வருத்தத்தில் உள்ளார் கயாது லோஹர்.