எனக்கும் கடன் இருக்கிறது: விஜய் சேதுபதி

1 mins read
a37b3a97-1481-4425-b9e2-cef371ad3fc5
விஜய் சேதுபதி. - படம்: இந்திய ஊடகம்

அண்மைய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கடனை அடைக்க வந்திருப்பதாக கூறுகிறீர்கள். எனக்கும் கடன் இருக்கிறது என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டார் விஜய் சேதுபதி.

படம் வெற்றி, தோல்வி என்று மாறி மாறி வந்தாலும் தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இந்தி, மலையாள மொழியில் நடித்துள்ளார். ஒரு படத்திற்கு ரூ.5 கோடி முதல் ரூ.8 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி நடத்த ரூ. 70 கோடி சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் தனக்கு கடன் இருப்பதாக இந்நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசும்போது, ‘’இந்த விளையாட்டில் பலரும் கடனை அடைக்கும் அளவுக்குப் பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

“நான் ஆயிரத்தில் சம்பாதித்தபோது அதே ஆயிரத்துக்கு கடன் இருந்தது. லட்சத்தில் சம்பாதித்தபோது அதற்குத் தகுந்த கடன் இருந்தது. தற்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன். ஆனாலும் அந்தக் கடன் பிரச்சினை தொடரத்தான் செய்கிறது. அதனால் அதனுடனேயே வாழ கற்றுக் கொண்டேன். வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வதுதான் சவால்,’’ என்றார் விஜய் சேதுபதி.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த ‘மாஸ்க்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் “இந்தப் படத்தில் நடிக்க 10 நாள்கள் மட்டும் போதும் என்று அழைத்துச் சென்று வைத்து செய்தார்கள். முழு சம்பளமும் தரவில்லை. இன்னும் சம்பளபாக்கி இருக்கிறது. அதைத் தந்தால் நன்றாக இருக்கும்,” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்

தொடர்புடைய செய்திகள்