நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகை.
நடிகர் விஜய்யுடன் ‘ஜில்லா’, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர்.
முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகிக்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாகப் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான ‘35 சின்ன கதகாடு’ என்கிற தெலுங்குப் படத்தில் உடல் எடையை அதிகரித்து நடித்தார்.
எடை கூடியதில் நிவேதா தாமஸ் ஆளே மாறிப் போனார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது உடல் எடை குறைந்த தோற்றத்துடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
முழுமையாகக் குறைக்க முடியவில்லை என்றாலும் அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அளித்து வருகின்றனர்.

