தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபிகாவை அங்கீகரித்த ஹாலிவுட்

1 mins read
4254b49f-3795-4212-81b4-0347ee566174
‘ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம்’ அங்கீகாரத்தைப் பெற்றுள்ள முதல் இந்திய நடிகை தீபிகா படுகோன். - படம்: தினத்தந்தி

இந்தியத் திரைத்துறையின் முன்னணி நடிகையரில் ஒருவரான தீபிகா படுகோனுக்குப் புதிய அனைத்துலக அங்கீகாரம் கிடைத்துள்ளது.

‘ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம்’ என்ற அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் வர்த்தக சபை இதனை அறிவித்துள்ளது.

இந்த அங்கீகாரத்தைப் பெறும் முதல் இந்திய நடிகை தீபிகா படுகோன்.

இருப்பினும் இந்த அங்கீகாரத்தை இந்தியர் ஒருவர் பெறுவது இது முதன்முறையன்று எனச் சில ஊடகங்கள் கூறுகின்றன.

இவருக்கு முன்பாக 1960ஆம் ஆண்டில், சாபு தஸ்தகிர் எனும் நடிகருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் இந்தியப் படங்களில் நடித்ததில்லை என்றும் அவை தகவல் வெளியிட்டுள்ளன.

ஹாலிவுட் வர்த்தக சபை ஒவ்வோர் ஆண்டும் புதிய பிரபலங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அங்கீகரிக்கும் விதமாக வைன் ஸ்திரீட் நடைபாதையில் ஒரு நட்சத்திரத்தைப் பதித்துவருகிறது.

இம்முறை, பொழுதுபோக்கு, கலாசாரப் பிரிவில் சிறப்பாகப் பங்களித்ததற்காக தீபிகா கௌரவிக்கப்பட்டுள்ளார்.

‘மோஷன் பிக்சர்ஸ்’ எனும் பிரிவில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடன் பிரிட்டிஷ் நடிகை எமிலி பிளன்ட், பிரெஞ்சு நடிகர் திமதி சால்மெட், ஹாலிவுட் நடிகர் ராமி மலெக் ஆகியோரும் இதே பிரிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்