அதிரடி நாயகனாக களமிறங்கும் ஹரீஷ்

1 mins read
06292edb-f3ee-46cb-be22-334862d73de3
ஹரீஷ் கல்யாண். - படம்: ஊடகம்

ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘டீசல்’ படம் விமர்சன ரீதியில் வரவேற்பு பெற்றாலும் வசூலில் சாதிக்கவில்லை. முதல் முறையாக இதில் அதிரடி ஆக்‌ஷன் நாயகனாக நடித்திருந்தார் ஹரீஷ்.

அவர் நடித்த ‘நூறு கோடி வானவில்’ என்ற படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில், மேலும் இரண்டு புதுப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் ஹரீஷ். ‘றெக்க’, ‘சீறு’ ஆகிய படங்களை இயக்கிய ரத்ன சிவாவின் படத்திலும் மீண்டும் அதிரடி நாயகனாக நடிக்க உள்ளாராம்.

மற்றொன்று பாண்டிராஜ் இயக்கும் படம். இதுவும் அதிரடி ஆக்‌ஷன் படமாகவே உருவாகிறது எனக் கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்