தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடின உழைப்பு, காயங்களுக்கு மத்தியில் நடந்த அழகான பயணம் ‘தம்மா’: ராஷ்மிகா

1 mins read
85e76ace-98df-4749-b23f-e37e31cbbc4d
ராஷ்மிகா. - படம்: ஊடகம்

பாலிவுட்டைக் கலக்கும் தெலுங்குப் பட நாயகி எனும் பெருமைக்குச் சொந்தக்காரராக வலம் வருகிறார் ராஷ்மிகா.

அண்மையில், இவர் நடிப்பில் வெளியான ‘தம்மா’ வசூலை வாரி குவித்ததோடு மட்டுமல்லாமல் ராஷ்மிகாவின் நடிப்புக்கு பாராட்டுகளையும் பெற்றுத்தந்துள்ளது.

அப்படத்தின் படப்பிடிப்பின்போது தான் எதிர்கொண்ட சிரமங்களையும் பெற்ற அனுபவங்களையும் வெளிப்படுத்தும் புகைப்படங்களை அவர் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

‘தம்மா’ தனது மனத்துக்கு மிகவும் நெருக்கமான படம் என்றும் ராஷ்மிகா கூறியுள்ளார்.

மேலும், “இதயம், கடின உழைப்பு, சிரிப்பு, காயங்களுக்கு மத்தியில் நடந்த அழகான பயணம் இது,” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

‘தடகா’ என்ற மர்மமான காட்டேரி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார்.

திகிலுடன் நகைச்சுவையையும் கலந்த பொழுதுபோக்கு படமாக இப்படம் அமைந்துள்ளது.

‘தம்மா’ படத்தில் ராஷ்மிகாவின் வேடம்.
‘தம்மா’ படத்தில் ராஷ்மிகாவின் வேடம். - படம்: ஊடகம்

“ஆயுஷ்மான் குரானா, பரேஷ் ராவலுடன் பணியாற்றியது பெருமை. அவர்களுடன் இருந்த ஒவ்வொரு நொடியும் ஒரு பாடம். அற்புதமான படக்குழு எனக்கு அமைந்தது,” என்றும் அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், முதல் நாளில் ரூ.24.87 கோடி வசூலித்தது. இது ராஷ்மிகாவின் பாலிவுட் பயணத்தில் சிறந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ராஷ்மிகா மந்தனா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த ‘தி கேர்ள் பிரண்ட்’ படம் வெளியீட்டுக்குத்யாராகி வருகிறது. புஷ்பா 2, சாவா, குபேரா போன்ற படங்கள் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்