தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அப்பாவை இளமையாகப் பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன்

1 mins read
7179ed53-34d9-41f7-8afb-77bf658ab97b
நடிகர் அருண்பாண்டியன், நடிகை கீர்த்தி பாண்டியன். - படம்: ஊடகம்

நடிகர் அருண்பாண்டியனுக்கு கிரணா, கவிதா, கீர்த்தி என 3 மகள்கள். இதில் கீர்த்தி பாண்டியன் ‛தும்பா’ , ‘அன்பிற்கினியாள்’, ‘கண்ணகி’, ‘ப்ளூ ஸ்டார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்தான் நடிகர் அசோக்செல்வனை காதல் திருமணம் செய்துள்ளார். அப்பா பாணியில் சினிமாவில் ஆர்வமாக இருக்கிறார்.

கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள படம் ‘அஃகேனம்’. இதற்கு ஆயுத எழுத்து என அர்த்தம். 3 கதாபாத்திரங்களைச் சுற்றி படம் வருவதால் இப்படிப்பட்ட தலைப்பு. இந்தப் படத்தை அருண்பாண்டியனே தயாரித்து இருக்கிறார். அவர் முக்கியமான வேடத்திலும் நடித்திருக்கிறார். படம் ஜூலை 4ஆம் தேதி வெளியாகிறது.

படம் பற்றி கீர்த்தி பாண்டியன் சொல்லும்போது, “முதன்முறையாக கால் டாக்சி ஓட்டுநராக நடித்து இருக்கிறேன். எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். நடிக்க வராவிட்டால் கார் பந்தயத்தில் இறங்கி இருப்பேன்.

“இந்தப் படத்தில் அந்த வேடத்தில் நடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரு பாடல் காட்சியில் மிகவும் இளமையான தோற்றத்தில் அப்பா நடித்துள்ளார்.

“ஒடிசா பின்னணியில் நடக்கும் அந்தப் பாடலை பார்த்து ஆச்சரியப்பட்டேன். அப்பாவை அவ்வளவு இளமையாகப் பார்த்தது மகிழ்ச்சி. பரத் வீரராகவன் இசையமைக்கிறார்.

“படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது படக்குழுவை உற்சாகப்படுத்தியுள்ளது. இயக்குநர், இசையமைப்பாளர், எடிட்டர் உள்ளிட்ட அனைவரும் புதுமுகங்களே,” என்றார் கீர்த்தி பாண்டியன்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை