இந்தியத் திரையுலகில் அதிக படங்களில் நடிக்கும் நாயகி யார் எனக் கேட்டால், ருக்மிணி வசந்த் என்று தயங்காமல் கூறலாம்.
கைவிரல்களின் எண்ணிக்கையையும் தாண்டி இவர் கைவசம் வாய்ப்புகள் குவிந்துள்ளன.
‘காந்தாரா சேப்டர்-1’ படம் இவரது தலையெழுத்தை மொத்தமாக மாற்றி எழுதிவிட்டது.
மணிரத்னத்தின் அடுத்த படத்தில் விக்ரம் மகன் துருவ்தான் கதாநாயகன் என்றும் நாயகியாக ருக்மிணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
“மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கியிருக்கிறேன். இன்று அவரது பட நாயகியாக தேர்வாகியிருப்பது பெரிய ஆசீர்வாதம். இதைப் பார்த்து மகிழ என் தந்தை இல்லையே என்ற வருத்தம்தான் மனத்தை வாட்டுகிறது,” என்று சோகத்துடன் சொல்கிறார் ருக்மிணி.
லண்டனில் நடிப்புப் பயிற்சியை மேற்கொண்ட அனுபவத்துடன் திரைத்துறையில் அடியெடுத்து வைத்துள்ள ருக்மிணிக்கு தமிழில் மேலும் இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

