பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி உள்ள ‘ஓஜி’ படம் வசூலில் அசத்தி வருகிறது.
தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் விளம்பர நிகழ்வில் பங்கேற்ற தமன் உள்ளிட்ட படக்குழுவினர் அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தனர்.
அங்கிருந்து திரும்பும்போது, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் ஒரே விமானத்தில் பயணம் செய்தாராம் தமன்.
“கிரிக்கெட் கடவுள் சச்சினுடன் டாலஸ் முதல் துபாய் வரை ஒன்றாகப் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
“அப்போது நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாடியபோது எடுக்கப்பட்ட காணொளிகளை அவருக்குக் காட்டினேன். ‘பந்தை அடித்து நொறுக்குவதில் உங்களிடம் தனி வேகம் உள்ளது’ என சச்சின் பாராட்டினார்.
“அவருடன் ஒன்றாகப் பணியாற்றும் வாய்ப்பு விரைவில் அமையும் என நினைக்கிறேன்,” என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் தமன்.
பரபரப்பான இசைப் பணிகளுக்கு மத்தியில் நேரம் கிடைத்தால் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை முக்கியப் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார் இவர்.