திருமணத்துக்குப் பிறகு தமது அழகு கூடியுள்ளதாக உணர்கிறாராம் நடிகை ரகுல் பிரீத் சிங்.
இவர், திருமணத்துக்குப் பிறகும் திரைப்படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்து வருகிறார். எனினும், இவர் தேவையின்றி கவர்ச்சியாக நடிப்பதாக சில தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
அண்மைய பேட்டியில் இதுகுறித்து ரகுலிடம் கேட்கப்பட்டது. அதற்கு, திருமணம் என்பது நடிகைகளின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கக்கூடாது என்று பதிலளித்துள்ளார் ரகுல்.
“திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் சுதந்திரமாக இருந்தால் அது விமர்சிக்கப்படுகிறது. ஆனால், திருமணம் செய்துகொண்ட ஒரு பெண் தன்னை கவர்ச்சியாக வெளிப்படுத்திக் கொள்வதில் தவறில்லை. நம்மைப் புரிந்துகொள்பவர் அருகில் இருந்தால் போதும், எல்லாம் இயல்பாக நடக்கும்.
“மற்றபடி, இதுபோன்ற விமர்சனங்களை நான் அறவே கண்டுகொள்வதில்லை. பெண்களின் திறமையை வரவேற்பதில் தயக்கம் கூடாது,” என்கிறார் ரகுல் பிரீத் சிங்.

