அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டி’.
இதில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இது முழுநீள அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த ‘ஆக்ஷன்’ படம் என்பதால் அவரது ரசிகர்கள் பட வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கேற்ப முதலில் வெளியிடப்பட்ட இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு பலத்த வரவேற்பைப் பெற்றது. அதிலும், அனுஷ்காவின் கதாபாத்திரம் அருமை என விமர்சகர்கள் பாராட்டி இருந்தனர்.
இந்நிலையில், ‘காட்டி’ படத்தின் ஓடிடி உரிமை ரூ.36 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தெலுங்கு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்னிந்தியத் திரையுலகில் இதுவரை எந்தவோர் நடிகையும் தனி நாயகியாக நடித்த படங்கள் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையானதில்லை என்று விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
வரும் ஜூலை 21ஆம் தேதி இப்படம் திரைகாண உள்ளது.