‘கூலி’ படத்தின் இடைவேளை வரையிலான முதல் பகுதியை அண்மையில் ரஜினிகாந்துக்கு திரையிட்டுக் காட்டியுள்ளார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
படத்தைப் பார்த்து முடித்ததும், ரஜினி மிகுந்த உற்சாகம் அடைந்து லோகேஷை பாராட்டியதாகக் கூறப்படுகிறது.
“நான் எதிர்பார்த்ததைவிட படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது,” என்று ரஜினி கூறியதைக் கேட்டு, லோகேஷும் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அடுத்து, ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் செல்லும் ரஜினி, இரு வாரங்களுக்குப் பிறகே சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
வெற்றிப் படங்களை அளித்த இளம் இயக்குநர்கள், அவற்றில் நடித்த நடிகர்களை நேரில் அழைத்துப் பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ரஜினி.
ஆனால், இதைக் கவனித்த சிலர், ரஜினி ஏதோ தன் வீட்டில் சும்மா பொழுதைக் கழிப்பதாக நினைத்துவிட்டனர்போலும்.
பல்வேறு தரப்பினரும் ரஜினியின் உதவியாளர்களை இடைவிடாமல் தொடர்புகொண்டு, “சாரை சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்து, நேரம் ஒதுக்கக் கேட்கிறார்களாம்.
மூன்று உதவியாளர்களும் தலா நூறு பேர் கொண்ட பட்டியலை நீட்டி, நேரம் ஒதுக்கக் கேட்க, ரஜினி மலைத்துப் போய்விட்டாராம்.