இளையர்களுக்குத் தன் மீது உள்ள ஈர்ப்பானது தற்காலிகமானது என்று கூறியுள்ளார் இளம் நாயகி ருக்மிணி வசந்த்.
அண்மைய நேர்காணலில், ‘கிரஷ்’ என ஆங்கிலத்தில் இந்தப் புகழ்ச்சி குறித்து தாம் அதிகம் சிந்திப்பது இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இப்புகழ்ச்சி கொஞ்ச காலத்தில் மாறக்கூடிய ஒன்று. ஆனால் நான் ஒரு விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்றும் சிலர் என்னை பிரியா என அழைக்கின்றனர். எனக்குப் பெயர் வாங்கித் தந்த ‘சப்தா சாகரடாச்ச யல்லோ’வில் நான் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் அது.
“அந்த ரசிகர்கள் என் கதாபாத்திரத்தை விரும்புகின்றனர். ரசிகர்கள் அப்படிப்பட்ட வேடத்தில் என்னை ஏற்றுக்கொள்வார்களா என்று தொடக்கத்தில் தயங்கினேன். ஆனால் மக்கள் அதை ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று கூறியுள்ளார் ருக்மிணி.
இந்த முதிர்ச்சியான பதில் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. சமூக ஊடகங்களிலும் பாராட்டுகளை அள்ளித் தந்துள்ளது.
இதனிடையே இவர் நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியானது முதல் இதுவரை ரூ.500 கோடி வசூல் கண்டுள்ளதாகத் தகவல். நிச்சயம் ஆயிரம் கோடியைக் கடந்துவிடும் என்கிறார்கள் திரையுலக விவரப் புள்ளிகள்.
இதனால் இந்திய அளவில் நன்கு அறிமுகமான நடிகையாக மாறியுள்ளார் ருக்மிணி.
28 வயதாகும் ருக்மிணி, கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘சப்தா சாகரடாச்ச யல்லோ’ கன்னடப் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழில் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதற்கு வரவேற்பு இல்லை. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.